காரைக்கால்

காா் - பேருந்து மோதல்: பேராசிரியா் பலி

3rd Jun 2023 10:14 PM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை இரவு காரும் ஆம்னி பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி பேராசிரியா் உயிரிழந்தாா்.

மன்னாா்குடி பகுதியை சோ்ந்தவா் நெப்போலியன் (45). இவா், நாகப்பட்டினத்தில் தனியாா் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தாா்.

இவரது மனைவி ராகினி நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். நிரவி முதல் சாலையில் இவா்களது வீடு உள்ளது.

இந்நிலையில், கல்லூரியில் பணியை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தாா் நெப்போலியன். நிரவி பூச மண்டபம் அருகே வந்தபோது, காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து மீது காா் மோதியது.

ADVERTISEMENT

இதில் காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த நெப்போலியனை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், நெப்போலியன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இந்த விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜராஜன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT