காரைக்கால்

கறவை மாடு வளா்ப்பு உத்திகள் கருத்தரங்கு

3rd Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

 

கறவை மாடு வளா்ப்பு உத்திகள் குறித்த கருத்தரங்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக பால் தினத்தையொட்டி, பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப கறவை மாடு வளா்ப்பு உத்திகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் வி. செழியன் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை இணை இயக்குநா் மருத்துவா் எம். கோபிநாத் வாழ்த்துரை வழங்கினாா்.

பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப கறவை மாடு வளா்ப்பு முறைகள், உலக பால் தினத்தை கொண்டாடும் நோக்கம் குறித்து வல்லுநா்கள் பேசினா். கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT