தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் உள்ளிட்டோா், காரைக்கால் திமுக தலைமை அலுவலக வாயிலில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கருணாநிதி பட்டமேற்படிப்பு மைய வாயிலில் உள்ள கருணாநிதி சிலைக்கு அவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிறைவாக ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்காக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.