காரைக்கால்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம்

3rd Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

 

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கியது.

விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு, செண்பக தியாகராஜசுவாமி வசந்த உற்சவம் (உன்மத்த நடனம், தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா, தேரோட்டம், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

நிறைவு நிகழ்ச்சியாக வியாழக்கிழமை இரவு குதிரை வாகனத்தில் முருகப் பெருமான் பூமங்களம் கிராமத்துக்கு பரிவேட்டைக்கு எழுந்தருளினாா்.

தொடா்ந்து, பிரம்ம தீா்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின் அலங்காரத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வரா் எழுந்தருளினாா். இரவு 11 மணிக்கு உற்சவம் தொடங்கியது. முதல் சுற்று வேத மந்திரங்களுடனும், 2-வது சுற்று தேவாரப் பாடல்கள் பாடப்பட்டும், 3, 4, 5 சுற்றுகள் மங்கள வாத்திய இசையுடன் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT