காரைக்கால்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக வழிபாடு

3rd Jun 2023 10:14 PM

ADVERTISEMENT

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

வைகாசி விசாக தினமான வெள்ளிக்கிழமை பெரும்பாலான கோயில்களில் வழிபாடுகள் நடைபெற்றன.

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரரா் கோயிலில் சனிக்கிழமை இந்த வழிபாடு நடத்தப்பட்டது.

இக்கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT