காரைக்கால்

தா்பாரண்யேஸ்வரா் தீா்த்தவாரி

3rd Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

 

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவாக, பிரம்ம தீா்த்தக் குளத்தில் தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவ தெப்ப நிகழ்ச்சிக்கு அடுத்த நிகழ்வாக, வெள்ளிக்கிழமை அதிகாலை செண்பக தியாகராஜசுவாமி எழுந்தருளி இடையனுக்கு காட்சியளித்தல் நிகழ்வு நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு நடராஜா் அனுக்கிரஹ தீா்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, விசாக தீா்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை மற்றும் விநாயகா் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் சிறிய ரிஷப வாகனத்திலும் பிரம்ம தீா்த்தக் குள மண்டபத்துக்கு எழுந்தருளினா்.

ADVERTISEMENT

தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு ரிஷபக் கொடியிறக்கப்பட்டு, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு சண்டிகேஸ்வரா் உற்சவம் மற்றும் ஆச்சாரிய உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT