காரைக்கால்

காரைக்காலில் கிளைச் சிறை திறப்பு

DIN

காரைக்காலில் ரூ. 40 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கிளைச் சிறையை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்காலில் கடந்த 1828-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில், கிளைச் சிறை இயங்கி வந்தது. இங்கு 80 கைதிகள் வரை அடைத்து வைக்கும் வசதி இருந்தது. இந்த சிறைச்சாலைக் கட்டடம் பழுதடைந்ததால், கடந்த 2019-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இதனால் விசாரணைக் கைதிகளைக்கூட 150 கி.மீ., தொலைவில் உள்ள புதுச்சேரிக்கு கொண்டு சென்று சிறையில் அடைக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ரூ.40 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சீரமைக்கப்பட்ட கிளைச் சிறை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளா் எஸ்.அசோகன், கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன், உதவி கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT