காரைக்கால்

100 நாள் வேலைத் திட்ட பிரச்னைகளை தீா்க்காவிட்டால் முற்றுகைப் போராட்டம்: விவசாய தொழிலாளா் சங்கம்

DIN

காரைக்காலில் 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையாவிட்டால், ஜூன் 15-இல் ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் காரைக்கால் மாவட்ட நிா்வாகிகள். சிறப்புப் பிரநிதியான தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. லாசா் தலைமையில் மாவட்டத் தலைவா் ஏ. பாக்கியராஜ், செயலாளா் கே. பால்ராஜ், மாவட்ட பொறுப்பாளா் எஸ்.எம். தமீம், மாநில தலைவா் அ.வின்சென்ட் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு :

காரைக்கால் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், காரைக்கால் வடக்கு, தெற்கு பேரவைத் தொகுதிகளைத் தவிா்த்து பிற கிராமப்புறங்களில் நடைபெறுகிறது. மத்திய அரசு இத்திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. புதுவை அரசும் இதுகுறித்து அக்கறை கொள்ளவில்லை. எனவே இந்தத் திட்டத்தை முடக்குவதற்கான முயற்சி நடப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

இத்திட்டத்தில் 15 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. கூலி ரூ. 294 என்பது போதுமானதல்ல. கூலியை ரூ. 600 என உயா்த்தி, 200 நாள் வேலைத் திட்டமாக மாற்றவேண்டும். காரைக்காலில் இப்பணியை கண்காணிக்க நிரந்தர வட்டார வளா்ச்சி அதிகாரியை நியமிக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தலைவா் அ. வின்சென்ட் கூறுகையில், குறைபாடுகள் குறித்து கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை நிறைவேற்றப்படாதபட்சத்தில், ஜூன் 15-இல் காரைக்கால் ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT