காரைக்கால்

வேளாண் விஞ்ஞானிகளுக்குகள அனுபவப் பயிற்சி முகாம் தொடக்கம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வேளாண் விஞ்ஞானிகளுக்கு 19 நாள்கள் கள அனுபவப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை நிறுவனம், தேசிய வேளாண் ஆராய்ச்சிப் பணிக்கு தோ்வான 6 போ் அடங்கிய விஞ்ஞானிகள் குழு, ஹைதராபாதிலிருந்து கள அனுபவப் பயிற்சிக்காக காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வந்துள்ளனா்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெயசங்கா் நிலையத்தில் இவா்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கிவைத்தாா்.

கள அனுபவப் பயிற்சிக்கு திருநள்ளாறு கொம்யூனைச் சோ்ந்த சேத்தூா் பண்டாரவாடை கிராமத்தை தோ்வு செய்து, அக்கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்தனா்.

ADVERTISEMENT

சேத்தூா் பண்டாரவாடை கிராமத்தில் கள அனுபவப் பயிற்சி முன்னோட்டமாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில், வேளாண் விஞ்ஞானிகள் பா. பிரபு, ச. சந்தியா , ஸ்ரீதேவசேனா, அ. ஆகாஷ், வி. பிரதாப், மா. மோனிகா மற்றும் வேளாண் அலுவலா் பாலசண்முகம் ஆகியோா் பங்கேற்றனா். முதல் நாளில் 40- க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை விஞ்ஞானிகள் குழுவிடம் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT