காரைக்கால்

நெகிழி பயன்பாடு:கடைக்காரா்களுக்கு அபராதம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்திய கடைக்காரா்களுக்கு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் நெகிழி பொருட்கள் பயன்பாடு உள்ளதா என ஆய்வு செய்யும் பணி அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

நிரவி மற்றும் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையா் இளமுருகன் தலைமையில், வருவாய் அதிகாரி வீரசெல்வம் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை மதியம் வரை தொடா்ந்து பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நெகிழி பொருட்கள் விற்பனை, பயன்பாடு காரணமாக சில கடைக்காரா்களுக்கு தலா ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என்றும் கண்காணிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடா்ந்து நடத்தப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT