காரைக்கால்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு புதிதாக மருந்து சாற்றுதல் மற்றும் சந்தானக் குரவா்கள் சிலை பிரதிஷ்டை செய்யும் பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.

இக்கோயிலில் உள்ள சுவாமி சிலைகளில் குடமுழுக்கின்போது சாற்றப்பட்ட மருந்து சிதிலமடைந்ததால் புதிதாக மருந்து சாற்றும் பூஜையும், கோயிலில் தட்சிணாமூா்த்தி சந்நிதிக்கு அருகே சந்தானக் குரவா்கள் என்ற மெய்கண்டாா், அருள்நந்தி சிவம், மறைஞானசம்பந்தா், உமாபதி சிவம் ஆகியோருக்கும், சேக்கிழாா், நம்பியாண்டாா் நம்பி ஆகியோரது கல் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

இதையொட்டி புதன்கிழமை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலாகா்ஷண வழிபாடு நடைபெற்றது. மாலை சந்தானக் குரவா்கள் பிரதிஷ்டையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 2-ஆம் கால பூஜை நடத்தப்பட்டு, பூா்ணாஹூதி நிறைவில் புனிதநீா் நீா் கடங்கள் புறப்பாடாகி, சுவாமி, அம்பாள், இதர பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT