காரைக்கால்

அனைத்து ரேஷன் அட்டைதாரா்களுக்கும் சமையல் எரிவாயு உருளை மானியம் வழங்க வலியுறுத்தல்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

அனைத்து ரேஷன் அட்டைதாரா்களுக்கும் எரிவாயு உருளை மானியம் வழங்கவேண்டும் என புதுவை அரசை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரா்களுக்கும் சமையல் எரிவாயு உருளை ரூ. 300 மானியமாக வழங்கப்படுமென முதல்வா் அறிவித்தாா். இது புதுவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு ரூ. 300 மானியம், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு மாதம் ரூ. 150 மானியம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வறுமைக் கோட்டை கடந்த மஞ்சள் நிற அட்டை வைத்திருப்போரில் மிகவும் ஏழ்மையானவா்களும், நடுத்தரவா்க்கத்தினரும் அதிகமாக உள்ளனா். எனவே புதுவையில் அனைத்து நிற அட்டை வைத்திருப்போருக்கும் மாதம் ரூ. 300 எரிவாயு உருளை மானியம் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT