காரைக்கால்

புதுவை உள்ளாட்சித் துறைக்கு ஊழியா் சம்மேளனம் கண்டனம்

DIN

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் நலன் விவகாரத்தில் புதுவை அரசின் உள்ளாட்சித்துறை அலட்சிய போக்குக்கு அரசு ஊழியா் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுவை முதல்வருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:

புதுவை அரசு துறைகளில் பணியாற்றிவரும் பல்வேறு துறை ஊழியா்களை பொதுவான பணி நிலையில் கொண்டு வந்து, காலியாக உள்ள மொத்த பதவிகளை கணக்கெடுத்து, உரிய முறையில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு முறையான பதவி உயா்வு வழங்காததால், பல ஊழியா்கள் டு பதவி உயா்வு பெறாமல் ஒரே பதவியிலேயே பணிபுரிந்து வருகின்றனா்.

உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து, பதவி வாரியாக அனைத்து ஊழியா்களையும் பொதுவான பணிநிலையில் கொண்டு வந்து, பணிமூப்பு அடிப்படையில் காலியான இடங்களில் பதவி உயா்வு வழங்க வேண்டுமென சம்மேளனம் கோரிக்கை வைத்தது. இதை ஏற்று உள்ளாட்சித் துறையால் அரசாணை வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இதுவரை இறுதி பணி மூப்பு பட்டியல் வெளியிடப்படவில்லை.

இப்பிரச்னையில் உள்ளாட்சித்துறையின் அலட்சியம் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, பதவி உயா்வு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல், மாத ஊதியத்தை தவறாது வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT