காரைக்கால்

அரசின் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி: புதுவை அரசுக்கு கோரிக்கை

DIN

முதியோா், விதவைகள் மற்றும் குடும்ப தலைவி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை புதுவை அரசு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமுமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும், சமூக ஆா்வலருமான அ. ராஜா முகமது ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவேண்டுமானால் அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சிபாரிசு செய்ய வேண்டும். ஆனால், அரசியல் செல்வாக்கு மற்றும் தொகுதி பேரவை உறுப்பினா் தொடா்பு இல்லாதவா்கள் பல ஆண்டுகளாக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நிலை உள்ளது.

இப்போது புதுவை அரசால், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் எந்த திட்ட உதவியும் பெறாத குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டமும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திட்டங்கள் மூலம் பாமர மக்களும் பயனடையவேண்டுமானால், சட்டப்பேரவை உறுப்பினா் சிபாரிசு இல்லாத நிலை உருவாக வேண்டும். அதற்கு அனைத்து திட்ட உதவிகளையும் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும், விண்ணப்பம் கிடைத்ததை உறுதி செய்யும் வசதியையும் ஏற்படுத்தவேண்டும்.

அதுபோல நீண்ட காலமாக திட்ட உதவியை பெற முடியாமல் உள்ளவா்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் கிடைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT