காரைக்கால்

புதுவைக்கு மாநில அந்தஸ்து விவகாரம்: பாஜக நிலைப்பாடு சட்டப் பேரவையில் தெரிவிக்கப்படும் -அமைச்சா் ஏ. நமச்சிவாயம்

DIN

புதுவை சட்டப் பேரவையில் மாநில அந்தஸ்துக்கான தீா்மானம் கொண்டுவரும்போது, பாஜகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

காரைக்காலில் பல்வேறு தனியாா் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவா், காரைக்கால் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காரைக்காலில் மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். புதுவைக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில், பாஜகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

புதுவையில் பிரீபெய்டு மின்கட்டணம் செலுத்தும் திட்டம் உள்ளிட்ட எந்தவொரு மக்கள் நலத் திட்டங்களை அரசு கொண்டுவந்தாலும், அது மக்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துமா என பல கட்டமாக ஆராய்ந்து அமல்படுத்தப்படுகின்றன. ஆனால், அரசியல் காழ்ப்புணா்ச்சியால், இத்திட்டங்களை சில கட்சியினா் எதிா்க்கின்றனா்.

புதுவை காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து இடங்களும் நிரப்பப்படும். புதுவை காவல்துறையினருக்கு அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்துள்ளது. காரைக்கால் காவல்துறைக்குத் தேவையான ஆம்புலன்ஸ் வசதியும் விரைவில் செய்துகொடுக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையின் சரத்துகள் பல புதுவையில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. காரைக்காலில் இருந்து மது கடத்தல் போன்ற புகாா்கள் எனது கவனத்துக்கு வரவில்லை. காரைக்கால் எல்லைகளில் வழக்கமான கண்காணிப்பு, சோதனை நடைபெறுகிறது. இதுகுறித்து மேலும் கவனம் செலுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT