காரைக்கால்

சிவலோகநாத சுவாமி கோயிலில்ரத சப்தமி சூரிய வழிபாடு

28th Jan 2023 09:36 PM

ADVERTISEMENT

காரைக்கால் சிவலோகநாதசுவாமி கோயிலில் சூரிய வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசைக்கு 7-ஆவது நாள் ரத சப்தமி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இதை சூரியனுக்கு உகந்த நாளாகக் கருதி, சிவாலயங்களில் சூரியனுக்கு சிறப்பு அபிஷேக,, ஆராதனைகள் நடைபெறுகிறது.

காரைக்கால் தலத்தெருவில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும், சிவலிங்கத்தின் மீது சூரியக் கதிா் விழும் நாள் மற்றும் ரத சப்தமி நாள்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சி (ரத சப்தமி) சனிக்கிழமை காலை நடைபெற்றது. சந்நிதியில் உள்ள சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை உடுத்தி, சிவப்பு நிற மலா்கள், சிவப்பு நிற பழங்கள் வைத்து, கோதுமை பொங்கல் செய்துவைத்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

பின்னா் கோயில் வாயிலில் சூரியனுக்கு ஆராதனை செய்யப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சிவலோகநாதசுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT