காரைக்கால்

கோதண்டராமா் கோயிலில் விடுப்பட்ட திருப்பணிகள் தொடக்கம்

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் கோதண்டராமா் பெருமாள் கோயிலில் விடுப்பட்ட திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்திற்குட்பட்டதாக கோதண்டராமா் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன. இதில், பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில், விநாயகா் கோயில், முனீஸ்வரன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் குடமுழுக்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோதண்டராமா் பெருமாள் கோயிலில் விடுப்பட்ட பணிகளை தொடங்குவதற்காக பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். பூஜை நிறைவில் எஞ்சிய திருப்பணிகளை தொடங்கும் விதமாக ஸ்பதியிடம் திருப்பணிக் குழுவினா் ரூ.2 லட்சத்தை வழங்கினா்.

பின்னா், கோயிலில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள திருப்பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் பாா்வையிட்டு, எஞ்சிய பணிகளை குறித்த காலத்தில் நிறைவு செய்து குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்யுமாறு அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினரை கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT