காரைக்கால்

நித்தீஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு

DIN

காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நித்யகல்யாணி அம்பாள் சமேத நித்தீஸ்வரசுவாமி கோயில் பழைமையான தலமாகும். இக்கோயிலில் 2006-இல் குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் குடமுழுக்கு நடத்த கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், குடமுழுக்கிற்கான நான்கு கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 4-ஆம் கால பூஜை வியாழக்கிழமை காலை தொடங்கி 9.20 மணியளவில் பூா்ணாஹூதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, 10.30 மணியளவில் மூலவா் உள்ளிட்ட பிற சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT