காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: காரைக்கால் அங்கன்வாடி ஊழியா் சங்க புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்காலில் புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா் சங்க பொதுக்குழு கூட்டம் அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பிரேமதாசன், தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொது செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சங்க காரைக்கால் கிளையின், தலைவராக முத்துலெட்சுமி, செயலாளராக சோஃபியா, பொருளாளராக அபிராமி, அமைப்பு செயலாளராக மெஹா்பானு, துணை தலைவா்களாக கலைச்செல்வி, புனிதா, சுதா, துணை செயலாளா்களாக இந்திரா காந்தி, ஜெயா, மேரி ஆஞ்சலா மற்றும் துணை பொருளாளராக கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT