காரைக்கால்

2 குடிசை வீடுகள் தீக்கிரை; எம்எல்ஏ நிதியுதவி

22nd Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் 2 வீடுகள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ பி.ஆா். திருமுருகன் நேரில் ஆறுதல் கூறி, நிதியுதவி அளித்தாா்.

காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா்கள் ரவி, ராஜேந்திரன். சகோதரா்களான இவா்களது குடிசை வீடுகளில் வெள்ளிக்கிழமை தீ விபத்து நேரிட்டது. காரைக்கால் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனா். சகோதரா்களின் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்தன. இதில், சுமாா் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தலா ரூ.5 ஆயிரம் தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணம் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT