காரைக்கால்

புதுவை துணை நிலை ஆளுநரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

21st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவை துணை நிலை ஆளுநரை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் முடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மாநிலத்தில் மதுக்கடைகள் அதிகமாக திறக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்துறை தனியாா்மயமாக்கப்படுவதாகக் கூறி, இந்த விவகாரத்தில் புதுவை யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை கண்டித்தும், ஆளுநா் பொறுப்பிலிருந்து வெளியேற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பிரேம்குமாா், துரைசாமி, தமிழரசி, ராதாகிருஷ்ணன், பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT