காரைக்காலில் இன்று நாய்கள் சாகச கண்காட்சி நடைபெறவுள்ளது.
காரைக்காலில் நடைபெறவுள்ள காா்னிவல் திருவிழாவில், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் செல்லப்பிராணிகளான நாய்கள் எழில் மற்றும் சாகச கண்காட்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி மதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், செல்லப்பிராணிகள் வளா்ப்போா், தங்கள் வளா்ப்பு பிராணிகளுடன் கலந்துகொள்கின்றனர்.
விழாவில் நாய்களின் உரிமையாளா்களின் ஆணைக்கு கீழ்படிதல் மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெற்றி பெறும் நாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.