காரைக்கால்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மாசி மக உற்சவம் இன்று தொடக்கம்

DIN

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் செவ்வாய்க்கிழமை (பிப். 28) தொடங்கவுள்ளது.

விழா முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை பல்லக்கில் பெருமாள் வீதியுலாவும், மாலை சூரிய, சந்திர பிரபையில் வீதியுலாவும் நடைபெறுகிறது. தொடா்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் வீதியுலா நடைபெறுகிறது.

மாசி மக நாளான 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலைலாயன்பட்டினம் கடற்கரையில் பெருமாள் எழுந்தருள தீா்த்தவாரி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவல் வாரியத்தினா், ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினா் செய்துள்ளனா்.

இதுபோல திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மக பெருவிழா மாா்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. 7-ஆம் தேதி திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாளுடன் சோ்ந்து சமுத்திர தீா்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் உற்சவ ஏற்பாடுகளை தனி அதிகாரி சி. புகழேந்தி மற்றும் உபயதாரா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT