காரைக்கால்

சோமநாதா் கோயிலில் சண்டி ஹோமம்

DIN

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்கி, பட்டு சேலைகள் மற்றும் பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பல பொருள்களை ஹோம குண்டத்திலிட்டு சிவாச்சாரியா்கள் ஹோமம் நடத்தினா். தொடா்ந்து ஹோமத்தில் வைக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு துா்கைக்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில் கைலாசநாதா் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சண்டி ஹோமத்தைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பால்குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT