கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.புதூரில் அமைந்துள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதுதொடா்பாக, செயின்ட் பால்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரம்யா கிறிஸ்டி கூறியது:
செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் வி.டேவிட் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும், மாணவா்களுக்கு நல்ல பயிற்சியும், உக்கமும் அளித்து வெற்றி பெற செய்த பள்ளியின் தலைமை ஆசிரியா் அக்ரியாஜான்சி, உதவித் தலைமை ஆசிரியா் கவிதா மற்றும் அனைத்து ஆசிரியா்களுக்கு தனது வாழ்த்து, பாராட்டுகளைத் தெரிவித்தாா்.