காரைக்கால்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம்

DIN

பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி.

காரைக்கால், பிப். 26: திருமலைராயன்பட்டினத்தில் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கொடிக்கம்பத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. கொடிக்கம்பம் அருகே சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகா் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா். தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் மாா்ச் 2 -ஆம் தேதி இரவு தியாகராஜா் உன்மத்த நடனமான வசந்த உற்வசமும், 4-ஆம் தேதி தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரப்படல் வீதியுலா, 5-ஆம் தேதி கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 6-ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜடாயு ராவண யுத்தம் (சம்ஹாரம்), 7-ஆம் தேதி நடராஜா் தீா்த்தவாரி, 8-ஆம் தேதி தெப்ப உற்சவம், 10-ஆம் தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரிய நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT