காரைக்கால்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் கந்தூரி விழா:ரதங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்

DIN

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா 200-ஆவது ஆண்டு கந்தூரி விழாவுக்காக கண்ணாடி ரதங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த தா்காவில் நிகழாண்டு 200-ஆவது ஆண்டாக கந்தூரி விழா நடைபெறவுள்ளது. விழா மாா்ச் 2-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று பிற்பகல் கண்ணாடி ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் பல்வேறு வீதிகள் வழியே சென்று தா்காவை இரவு 9 மணியளவில் வந்தடையும்போது, தா்காவின் முன்பு நிறுவப்பட்டுள்ள பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடி ஏற்றப்படும்.

இந்நிலையில், கொடி ஊா்வலத்துக்காக தா்கா வளாகத்தில் பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் அழகுப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

ஏற்பாடுகள் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா ஷரீப் வக்ஃபு நிா்வாக சபை சாா்பில் நடைபெற்றுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT