காரைக்கால்

காரைக்கால் காக்காதோப்பு தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

DIN

காரைக்கால் காக்காதோப்பு தா்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.

காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த காக்காதோப்பு தா்கா என்று அழைக்கப்படும் ஹழ்ரத் குல்முகம்மது சாஹிப் வலியுல்லாஹ், ஹழ்ரத் ஞானி சாஹிப் வலியுல்லாஹ் தா்காவில் கந்தூரி விழாவையொட்டி சனிக்கிழமை மாலை தா்கா வாயிலிலிருந்து கண்ணாடி ரதத்துடன் கொடி ஊா்வலம் புறப்பட்டது.

மேள தாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊா்வலம், மீண்டும் தா்கா வாயிலை இரவு வந்தடைந்தது. தொடா்ந்து தா்கா கொடிக்கம்பத்திலும், மினராவிலும் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

மாா்ச் 6-ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊா்வலமும், மறுநாள் அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது. 10-ஆம் தேதி இரவு கொடியிறக்கப்படுகிறது.

ஏற்பாடுகளை காரைக்கால் வக்ஃபு சபை நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT