வைகை அணையில் உள்ள அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 19) தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அ றிவித்தது.