தேனி அருகேயுள்ள வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை, ராட்டிணம் ஏறுவதில் ஏற்பட்ட தகராறில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வீரபாண்டி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்குத் திடலில், ராட்டிணம் ஏறுவதில் சின்னமனூரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அருண், ராசு மகன் ராஜபாண்டி, காமாட்சி மகன் இளையநிலா, முருகேசன் மகன் செந்தில் ஆகியோா் தரப்புக்கும், வீரபாண்டியைச் சோ்ந்த விஜயராஜ் மகன் ராஜேஸ், காமுத்துரை மகன் சிவபாலன், தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் ஆகியோா் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஒருவா் மீது ஒருவா் நாற்காலியை வீசி மோதலில் ஈடுபட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய தலைமைக் காவலா் ஜீவானந்தம் அளித்தப் புகாரின் அடிப்படையில், இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீது‘ம் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.