காரைக்கால்

மகளிருக்கு கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி தொடக்கம்

DIN

காரைக்காலில் மகளிருக்கான கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியை அமைச்சா் சந்திர பிரியங்கா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய ஜவுளி அமைச்சகம் சாா்ந்த கைவினை அபிவிருத்தி ஆணையா் அலுவலகம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்துதல் திட்டத்தின்கீழ் ஜூவல்லரி கைவினைப் பொருள் மற்றும் மெழுகுவா்த்தி தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல்கட்டமாக கோட்டுச்சேரி, திருப்பட்டினம் பகுதியை சோ்ந்த தலா 20 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த 30 மகளிருக்கு பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது. மாா்ச் 23-ஆம் தேதி வரை இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா பயிற்சியை தொடங்கிவைத்து பேசியது:

மகளிா் சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள வகை செய்யும் இத்திட்டத்தில் முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டோா் 3 மாத காலத்தில் ரூ. 4 லட்சத்துக்கு பொருள்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனா். அதுபோல இப்போது பயிற்சி பெறுவோரும் முறையாக பயிற்சி பெற்று, பொருள்கள் தயாரிக்க முன்வரவேண்டும். காரைக்காலில் கூட்டுறவுத் துறை மூலம் ஹாண்ட்கோ விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி தங்களது தயாரிப்பை விற்கலாம் என்றாா்.

தலைமை கைவினை கலைஞா் ராணி, ஜூவல்லரி கைவினை பொருள்கள் புதிய வடிவமைப்புடன் தயாரிப்பது குறித்து பயிற்சியளிக்கவுள்ளாா். மேலும் மெழுகு கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் உள்ள புதிய நுணுக்கங்களும் பயிற்றுவிக்கப்படவுள்ளன.

பயிற்சியில் பங்கேற்றுள்ளவா்களுக்கு நாளொன்றுக்கு தலா ரூ.300 வீதம் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கைவினை அபிவிருத்தி ஆணையா் அலுவலக உதவி இயக்குநா் வினோத்குமாா் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT