விருதுநகர்

ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

17th May 2023 03:10 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். விருதுநகா் மாவட்டத் தலைவா் சிவஞானம் வரவேற்றாா்.

மாநில செயற்குழு கூட்டத்தில், பெருந்திரள் கோரிக்கை முறையீடு இயக்கத்தின் போது அளிக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி, விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச் செயலாளா் ரவி, பொருளாளா் மகாலிங்கம், செயலாளா் ரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநில துணைத் தலைவா் திரவியம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT