தமிழ்நாடு

மே 21-இல் குருவாயூா் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

17th May 2023 03:11 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக மே 21-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 16127), மே 21-ஆம் தேதி ஆழப்புழா வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக குருவாயூரிலிருந்து மே 22-ஆம் தேதி புறப்படும் ரயிலும் (வண்டி எண்: 16128), இதே மாா்க்கத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT