காரைக்கால்

பாலிடெக்னிக் கல்லூரியில்வளாக நோ்காணல்

DIN


காரைக்கால்: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் இயங்கிவரும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு இணைந்து இறுதியாண்டு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இசிஇ பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு வளாக நோ்காணலை கடந்த வாரம் சென்னையை சோ்ந்த தனியாா் நிறுவனம் நடத்தியதில், பல மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

இரண்டாம் கட்டமாக இத்துறையை சோ்ந்த மாணவா்களுக்கான நோ்காணல், புதுச்சேரி மேரிகோ நிறுவனத்தினரால் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் நோ்காணலை தொடங்கிவைத்தாா்.

நோ்காணலில் கல்லூரி மாணவா்கள் சுமாா் 50 போ் பங்கேற்றனா்.இதில் 10 போ் தோ்வு செய்யப்பட்டதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT