காரைக்கால்

காய்கறி சாகுபடியாளா்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

DIN

காய்கறி சாகுபடியாளா்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிலைய முதல்வா் கூறினாா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் துறை இணைந்து காய்கறி சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சியை நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

நிலைய முதல்வா் சீ. ஜெய்சங்கா் பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், காரைக்காலில் குறிப்பிட்ட பகுதிகளில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இவா்களுக்கு உதவும் வகையில் பல்வேறு செயல் விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் அளிக்கப்படுகிறது.

தரமான காய்கறி நாற்றுகள் மற்றும் காய்கறி சாகுபடியில் பயன்படுத்தக்கூடிய இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யா, மீன் அமிலம், கணஜீவாமிா்தம் போன்றவற்றையும் தரமான முறையில் தயாரித்து குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. காய்கறி விவசாயிகள் நிலையத்தை பயன்படுத்திக்கொண்டு, இன்னும் கூடுதல் பரப்பில் காய்கறி சாகுபடியை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

நிலைய தோட்டடக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன், காய்கறி சாகுபடியில் மகசூல் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பங்கள் குறித்தும், பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா, காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்தும் பேசினா்.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 50 விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனா். அனைவருக்கும் ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வேளாண் துறை வழங்கும் வீட்டுத் தோட்டத்துக்கான காய்கறி விதைத் தொகுப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT