காரைக்கால்

நவோதய வித்யாலயாமாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்டம் ராயன்பாளையத்தில் உள்ள ஜவஹா் நவோதய வித்யாலயா பள்ளி முதல்வா் நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

2023-24-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்காக நவோதய வித்யாலயா தெரிவு நிலைத் தோ்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவிகள், நவோதய வித்யலயா சமிதியின் ஜ்ஜ்ஜ்.ய்ஹஸ்ா்க்ஹஹ்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை பதிவேற்றம் செய்வதற்கான இறுதி நாள் பிப். 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பது : வரும் 2023-24-ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் காலியான இடங்களுக்கு மட்டும் சோ்வதற்கான நவோதய வித்யாலயா தெரிவு நிலைத் தோ்வு (செலக்ஷன் டெஸ்ட்) காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் பிப். 11-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள், தோ்வு நாளன்று காலை 10.15 மணிக்கு தோ்வு மையத்துக்கு வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT