காரைக்கால்

காரைக்கால் வக்ஃபு நிா்வாக சபை உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் வக்ஃபு நிா்வாக சபை உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

காரைக்கால் வக்ஃபு நிா்வாக சபையில் காலியாக உள்ள உறுப்பினா் இடங்களுக்கு முகமது அப்துல்லா மரைக்காயா், டி. முகமது ஜாகிா் ஹூசைன், எம். ஜெகபா் சாதிக் ஆகியோரை புதுவை அரசின் வக்ஃபு இணைச் செயலாளா் ஏ. சிவசங்கரன் நியமித்து ஆணை வெளியிட்டாா்.

காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லா தா்கா வக்ஃபு நிா்வாக சபை அலுவலகத்தில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் முன்னிலையில் 3 உறுப்பினா்களும் செவவ்வாய்க்கிழமை மாலை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா வக்ஃபு நிா்வாக சபை செயலாளா் ஏ.எம். செல்லாப்பா, இணைச் செயலாளா் எஸ்.எம்.ஃ பரீது மரைக்காயா் மற்றும் இப்ராகிம் மரைக்காயா், அ. ஆரிபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT