காரைக்கால்

பிப்.10 முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: காரைக்காலில் பிப்.10-ஆம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு வரும் 10- ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும்

பள்ளிகள், தனியாா் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) ஆகியவற்றில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதன் தொடக்க நிகழ்ச்சி காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT