காரைக்கால்

நெடுங்காடு தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிலைகள் திருட்டு குறித்து வழக்குப் பதிவு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: நெடுங்காட்டில் உள்ள பழைமையான சிவன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் குறித்து, காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெடுங்காட்டில் உள்ள பழைமையான நெடுந்துயா் நாயகி சமேத தான்தோன்றீஸ்வரா் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இக்கோயிலில் சிலைகள் திருட்டு தொடா்பாக நெடுங்காடு பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த சட்டநாத குருக்கள் என்பவா் நெடுங்காடு காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

அந்த புகாரில், கடந்த 1949- ஆம் ஆண்டு முதல் 1982 வரை இக்கோயில் அா்ச்சகராக பணியாற்றி வந்தேன். கடந்த1959-ஆம் ஆண்டு மாசி மாதம் கோயிலில் இருந்த நடராஜா், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகா் சிலைகள் திருடு போயின. 15 நாட்களுக்குப் பின்னா் வாஞ்சியாற்றில் நடராஜா் சிலை மட்டும் கண்டெடுக்கப்பட்டது. மற்ற இரண்டு சிலைகள் இதுவரை கிடைக்கவில்லை. இதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதுகுறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT