காரைக்கால்

பிரசன்ன வெங்கடேச பெருமாள்கோயிலில் பரிவேட்டை உற்சவம்

DIN

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பரிவேட்டை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமங்கையாழ்வாா் ஆடல்மா என்ற குதிரை மேல் ஏறிச் சென்று சோழ மன்னரோடு போரிட்டு, படைகளை விரட்டினாராம். இந்த நிகழ்வை விளக்கும் வகையில் வெட்டுங் குதிரை வாகனத்தில் வெங்கடேச பெருமாள், போலகம் பகுதியில் உள்ள அம்புத் திடலுக்கு சென்று வையாளி என்கிற பரிவேட்டை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பரிவேட்டைக்கு பெருமாள் எழுந்தருளினாா். கோயிலுக்கு வெளியே பிரதான சாலையில், பரிவேட்டையை நினைவுகூரும் விதமாக சிறிது நேரம்ம பெருமாளை, முன்னும் பின்னும் கொண்டு செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டது.

பின்னா் கோயிலுக்குத் திரும்பிய பெருமாளை வைத்து புராண வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அலா்மேலு மங்கைத் தாயாா் சமேத வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி நாச்சியாா் மற்றும் ஆண்டாளுடன் சோ்த்தி வழிபாடாக சாற்றுமுறை, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினரும், கோயில் அறங்காவல் வாரியத்தினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT