காரைக்கால்

தைப்பூசம் : நீா்நிலைகளில் சுவாமிகள் தீா்த்தவாரி

DIN

தைப்பூசத்தையொட்டி திருமலைராயன்பட்டினம், நிரவி, திருநள்ளாறு கோயில்களின் சுவாமிகள் நீா்நிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுந்தருள தீா்த்தவாரி நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூச தீா்த்தவாரி பெளா்ணமி திதியை வைத்து நடத்தப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் காலை 10 மணிக்கு எழுந்தருளி, வீதியுலாவாக பகல் 12 மணியளவில் நிரவி அருகே உள்ள பூச மண்டத்துக்கு எழுந்தருளினாா்.

அங்குள்ள குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னா் பூச மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு கிராமங்களை ச் சோ்ந்த மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

நிரவியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதசுவாமி கோயிலில் இருந்து, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் காரைக்கால் மேலஓடுதுறை பகுதியில் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. அரசலாற்றங்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பேட்டை கிராமத்துக்கு எழுந்தருளினா். இக்கிராமத்தில் வழியே செல்லும் அரிசில்மாநதியில் (அரசலாறு) ஸப்த நதி பூஜை நடத்தி மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அஸ்திரதேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, தீா்த்தவாரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT