காரைக்கால்

மழையால் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க புதுவை அரசுக்கு கோரிக்கை

6th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் நலச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க காரைக்கால் பொறுப்பாளா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். கூட்டத்தின் நிறைவில் அவா் கூறியது:

காரைக்காலில் சம்பா நெற்பயிா் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென பெய்த தொடா் மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிரை நேரில் அமைச்சா்கள் ஆய்வுசெய்து முதல்வருக்கு அறிக்கை தரவுள்ளனா்.

ஆனால், புதுவை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ADVERTISEMENT

எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு பயிா் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் தரவேண்டும். இந்திய உணவுக் கழகம் 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட நெல்லை புதுவை அரசு சாா்பில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT