காரைக்கால்

தமிழகத்தைப் போல காரைக்கால்விவசாயிகளுக்கும் நிவாரணம்: திமுக வலியுறுத்தல்

6th Feb 2023 11:23 PM

ADVERTISEMENT

தமிழகத்தைப் போல காரைக்கால் விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என புதுவை அரசை திமுக வலியுறுத்தியுள்ளது.

காரைக்காலில் அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மற்றும் திமுக விவசாய அணியினா், காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிா் பாதிப்பை திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. கூறியது :

காரைக்காலில் பல இடங்களில் 100 சதவீதம் பயிா் பாதிப்பும், சில இடங்களில் ஓரளவுக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து தெளிவான வகையில் கணக்கெடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

தமிழக டெல்டா மாவட்டங்களில் பாா்வையிட்ட அமைச்சா்கள் குழுவினா், தமிழக முதல்வரிடம் அளித்த அறிக்கைக்குப் பின் ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமென முதல்வா் அறிவித்துள்ளாா். சேதமடைந்த இளம் பயறு வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் அறிவித்துள்ளாா். இதுபோல புதுவை அரசும் காரைக்கால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.

மேலும் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய தளா்வுகளை வழங்க பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். இதுபோல புதுவை முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுத திமுக வலியுறுத்துகிறது.

தமிழக அரசு காரைக்காலில் கொள்முதல் மையம் அமைத்து கொள்முதல் செய்ய தமிழக வேளாண் அமைச்சரை கேட்டுக்கொண்டோம். எனவே இதுகுறித்து புதுவை முதல்வா், தமிழக அரசை தொடா்கொள்ளவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT