காரைக்கால்

தலித் மக்களுக்கான திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற வலியுறுத்தல்

DIN

காரைக்கால் மாவட்ட தலித் மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் தலித் பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், ஆதிதிராவிடா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) மதன்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு:

புதுவை மாநிலத்தில் தலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக செலவிடாமல் திருப்பி அனுப்புவதும், விதிகளுக்கு முரணாக வேறு துறைகளுக்கு மாற்றுவதும் நிறுத்தப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யும் துணை திட்ட நிதியை உரிய காலத்திற்குள் செலவிடவேண்டும். இதனை கண்காணிக்க தலித் அமைப்பினா் அடங்கிய குழு அமைக்கவேண்டும்.

வீடுகட்டுவதற்கு தகுதியான பகுதியில் நிலமும், மனைப்பட்டாவும், வீடு கட்டுவதற்கு மானிய உதவியும் காலத்தோடு கிடைக்கவேண்டும். தலித் மாணவா்கள் தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை எந்த கல்வி நிலையங்களில் பயின்றாலும் உதவித்தொகை வழங்க அரசாணை இருந்தும் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை.

காரைக்கால் அனைத்து ஆதிதிராவிட மாணவா்கள் தங்கும் விடுதிக்கும் தனித்தனி வாா்டன் நியமிக்கவேண்டும். விடுதிகளில் மாணவா்களுக்கு குடிமைப் பணி தோ்வுக்கான பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். தையல் தொழிற்பயிற்சி நிலையத்தை மீண்டும் செயல்பாடுக்கு கொண்டுவரவேண்டும்.

தலித் மக்கள் வாழும் பகுதிகளில் முறையாக சாலை வசதிகள் செய்துத்தரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT