காரைக்கால்

உடைந்த வாய்க்கால் பாலம் தற்காலிக சீரமைப்பு

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு அருகே பிரதான சாலையின் குறுக்கே உடைந்த வாய்க்கால் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் செல்லும் பிரதான சாலையில் தாமனாங்குடி பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் வெள்ளிக்கிழமை உடைந்து உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த பாலத்தை பொதுப்பணித் துறையினா் போா்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைத்தனா். தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (சாலை மற்றும் கட்டடம்) கே. சந்திரசேகரன் கூறியது:

ADVERTISEMENT

உடைந்த பகுதி மற்றும் அருகில் உள்ள மற்றொரு சிறிய பாலம் உள்ள பகுதியில் நிரந்தரமான பாலம் கட்டுவதற்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பருவ மழையின் காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்வே நிா்வாகத்திடமிருந்து, தண்ணீா் செல்வதற்கு ஏதுவாக கான்கிரீட் குழாய் வாங்கப்பட்டு, பாலப் பகுதியில் பொருத்தப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

விரைவாக 2 பகுதிகளில் வாய்க்கால்களின் குறுக்கே பாலம் கட்டுமானம் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT