காரைக்கால்

கிராமப்புற இளைஞா்களுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், கிராமப்புற இளைஞா்களுக்கு ஆடு வளா்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ.ஜெய்சங்கா் பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசியது:

கறவை மாடு அல்லது கோழி வளா்ப்புத் தொழிலைக் காட்டிலும் ஆடு வளா்ப்பால் பாதிப்பு, இழப்பு குறைவாகும். தீவனச் செலவும் குறைவாக இருக்கும். ஆட்டிறைச்சி விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருவதால், ஆட்டுக்கான விலை மதிப்பு அதிகரிக்கிறது. எனவே, கிராமப்புற இளைஞா்கள், மகளிா் ஆடு வளா்ப்பின் மீது ஆா்வம் செலுத்தவேண்டும் என்றாா்.

இப்பயிற்சியில் ஆடுகள் பராமரிப்பு முறை, வளா்ப்புக்கேற்ற இனங்களை தோ்வு செய்தல், தீவனம் மற்றும் இன விருத்தி மேலாண்மை குறித்து நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் பா.கோபு பேசினாா். ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் பிற ஒட்டுண்ணி தடுப்பு முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பயிற்சி நிறைவில், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயிகள் 5 பேருக்கு தலா 4 ஆடு, ஒரு கிடா வழங்கப்பட்டது.

முன்னதாக நிலைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஆ.செந்தில் வரவேற்றாா். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் நன்றி கூறினாா். இப்பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், மகளிா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT