காரைக்கால்

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் பகுதியில் காணாமல்போன 33 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கைப்பேசிகளை தவறவிட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், காவல் தலைமை அலுவலக தனிப் பிரிவினா் விசாரணை மேற்கொண்டுவந்தனா். இந்த கைப்பேசிகள் எந்த பகுதியில் பயன்பாட்டில் உள்ளன என்பதை சிக்னல் மூலம் அறிந்தது அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனா்.

இதில், சுமாா் 6 லட்சம் மதிப்பிலான 33 கைப்பேசிகளை, காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையிலான குழுவினா் மீட்டனா். பின்னா், கைப்பேசிகளின் உரிமையாளா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்களிடம் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

மேலும், இப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை அவா் பாராட்டினாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் லெனின்பாரதி, மா்த்தினி, பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT