காரைக்கால்

மதுக்கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல்

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே மதுக்கடைகளில் சுகாதாரமற்ற இறைச்சி உணவுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், வாஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில், சுகாதாரமற்ற வகையில் இறைச்சி உணவுகள் விற்கப்படுவதாக புதுவை உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, வாஞ்சூா் பகுதியில் இயங்கிவரும் தனியாா் மதுக்கடைகளில் புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில், கெட்டுப்போன இறைச்சி உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், கடையின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT