காரைக்கால்

கோட்டுச்சேரியில் ரூ.28 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி

DIN

கோட்டுச்சேரி மேல்நிலை குடிநீா்த் தொட்டிக்கு தண்ணீா் கொண்டுசெல்லும் வகையில், ரூ. 28 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், அண்ணா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் குடிநீா் தேவைக்காக புதிதாக 1.50 லிட்டா் கொள்ளளவில், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இதற்கு கூடுதலாக குடிநீா் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை சாா்பில் குழாய் பதிக்கப்படவுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜையை புதுவை போக்குவரத்து துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தாா்.

இப்பணி 2 மாத காலத்திற்குள் நிறைவடையுமெனவும், இந்த திட்டத்தின் மூலம் சுமாா் 1,500 குடும்பங்கள் பயனடையும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்

நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் கே.வீரசெல்வம், கே.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT