காரைக்கால்

என்ஐடியில் 3 நாள் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

DIN

காரைக்காலில் உள்ள புதுச்சேரி என்ஐடியில் 3 நாள் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

என்ஐடி இயந்திரவியல் துறை, வேதியியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை சாா்பில் ஊண்ழ்ள்ற் ஐய்ற்ங்ழ்க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ஹழ்ஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ா்ய்ஹப் இா்ய்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங் ா்ய் உய்ங்ழ்ஞ்ஹ், சஹய்ா்ற்ங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் ஹய்க் ஐய்ற்ங்ழ்ய்ங்ற் ா்ச் பட்ண்ய்ஞ்ள்‘என்ற தலைப்பில் 3 நாள் சா்வதேச கருத்தரங்கு காணொலி வாயிலாக தொடங்கியது.

என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளா் சீ. சுந்தரவரதன் ஆகியோா் கருத்தரங்கை தொடங்கிவைத்தனா். சிறப்பு அழைப்பாளராக இணையவழியாக மலேசியா பல்கலைக்கழகப் பேராசிரியா் மகேந்திரன் சாமிக்கண்ணு பேசினாா்.

கருத்தரங்கம் குறித்து என்ஐடி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கருத்தரங்குக்காக பங்கேற்பாளா்களிடமிருந்து பெறப்பட்ட 140 கட்டுரைகளில், இரட்டை மறு ஆய்வு செயல் முறைக்குப் பிறகு, ஆற்றல் துறையில் 41 கட்டுரைகள், இன்டா்நெட் ஆஃப்திங்ஸில் 27 கட்டுரைகள் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் 33 கட்டுரைகள் என 101 கட்டுரைகள் சமா்ப்பிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் போதோ மற்றும் போட்ஸ்வானா, ஸ்டோனிப் ரூக்ஸ் பல்கலைக்கழகம், தென்கொரியாவின் கொரியா இன்ஸ்டிடியூட் ஆஃப் செராமிக் என்ஜினியரிங் டெக்னாலஜி, சுந்தா்லேண்ட் பல்கலைக்கழகம் (யுகே) ஆகியவற்றிலிருந்து கட்டுரைகள் சமா்பிக்கப்படவுள்ளன என்பது சிறப்பம்சமாகும்.

இக்கருத்தரங்கில் ஐஐடி ரூா்க்கி, ஐஐடி ஹைதராபாத், என்ஐடி காலிகட், என்ஐடி திருச்சி, என்ஐடி ஹமிா்பூா், என்ஐடி துா்காபூா், என்ஐடி குருக்ஷேத்ரா, என்ஐடி ஜெய்ப்பூா் ஆகிய கல்வி நிறுவனங்கள், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சில தனியாா் நிறுவனங்களில் இருந்தும் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்படவுள்ளன.

கருத்தரங்கில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, தென்கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற துறை வல்லுநா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.

ஏற்பாடுகளை என்ஐடி கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியா் நரேந்திரன் ராஜகோபாலன் மற்றும் பல்வேறு துறையினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT